சென்னையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.
தமிழ்நாட்டில் திருச்சியில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
22,020 உயிரிழந்த நிலையில், கொரோனாவுக்கு இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் பலி எண்ணிக்கை ஆயிரத்து 700-ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 17 ஆயிரத்து 446 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தோற்று பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து அறிகுறிகள் என்ன என்பது மட்டும் அல்லாமல் பாதித்தவர்களின் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் 27 பேருக்கு கொரோனா தோற்று பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை விவரங்களை வெளியிட்டு வரக்கூடிய நிலையில் மேலும் சென்னையை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தோற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது.
மூலக்கூறு ஆய்வக கூடங்களில் இருந்து கொடுக்கக்கூடிய தகவலின் அடிப்படையில்தான் தமிழக சுகாதாரத்துறை இந்த தகவல்களை வெளியிட்டு வருகிறது.
லண்டனில் இருந்து சென்னை வந்த 24 வயது இளைஞர் மற்றும் 65 வயது பெண் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.