நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய 7 மாநில அரசுகள் முடிவு

நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட 7 மாநிலங்களின் முதல்வர்கள் முடிவு செய்துள்ளனர்.

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை நாட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் 7 மாநில முதல்வர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

இந்த நேரத்தில் தேர்வுகளை நடத்துவதால் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

மேற்கு வங்கம், புதுச்சேரி, மராட்டியம், பஞ்சாப், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.

பலதரப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்புகளுடன் இருக்கும் போதே தலைவர்களையே கொரோனா பீடித்துள்ள நிலையில் நீட், ஜே.இ.இ. தேர்வுகளை நடத்த முடிவெடுத்து அதனால் 28 லட்சம் மாணவர்கள் கொரோனாவினால் பாதிப்படைய மாட்டார்கள் என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

நாட்டில் வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளிவைக்க கோரிக்கை வலுத்தபோதிலும் திட்டமிட்டப்படி தேர்வு நடத்த ஏற்பாடு செய்து ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டு மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.nta.neet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே