3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர்கள் வழங்கப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண மக்கள், ஏழைகள் மற்றும் தினக்கூலிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உடனடியாக உதவும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல நல திட்டங்களை அறிவித்துள்ளார். 

1. ஊரடங்கால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உதவும்.

2. ஏழை தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ரூபாய் நிவாரண தொகை ஒதுக்கீடு. இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரசு உதவ உள்ளது.  யாரும் பசியில் இருக்கக்கூடாது என்பதற்காக ஏழை தொழிலாளர்களுக்கு அரசு உதவி.

3. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு.

4. சுகாதாரம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் ரூ.50 லட்சம் அளவிற்கு மருத்துவ காப்பீடு.

5.  80 கோடி ஏழை மக்களுக்கு அடுத்த 3 மாதங்கள் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும்.

6. ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதம் ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும்.

7. 8.7 கோடி விவசாயிகளுக்கு முதற்கட்டமாக ரூ.2000 வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

8. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர்கள் வழங்கப்படும்.

9. ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு 3 மாதங்களுக்கு ரூ. 500 வழங்கப்படும்.

10. மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அடமானம் எதுவும் இல்லாமல் ரூ. 20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். இதன் மூலம் 7 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.

11. தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கான PF பணத்தை 3 மாதங்களுக்கு அரசே செலுத்தும்.

12. வருங்கால வைப்பு நிதியில் உள்ள தொகையில் 75% தொகை அல்லது 3 மாத ஊதியத்தை பணியாளர்கள் முன்பணமாக பெறலாம்: இதன் மூலம் 4.8 கோடி ஊழியர்கள் பயன்பெறுவர். 

13. பதிவு செய்யப்பட்ட 3.5 கோடி கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ. 31000 கோடி நிவாரண தொகை ஒதுக்கீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *