உகாதி : சேலையில் சன்னி லியோன்…

பாலிவுட் நடிகை சன்னி லியோன், மராத்தி புத்தாண்டை சேலை கட்டி செம க்யூட்டாக விநாயகர் சிலை முன் நின்று கொண்டாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால், இந்த புத்தாண்டு பண்டிகைகள் களையிழந்து காணப்பட்டன.

பிரம்மாண்ட விநாயகர் சிலை முன்பு, சேலை கட்டி, செம அழகாக பொட்டு, மல்லிகைப் பூவெல்லாம் வைத்து, நடிகை சன்னி லியோன் மராத்தி வருடப் பிறப்பை கொண்டாடி உள்ளார்.

அதன் புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு, லைக்குகளை அள்ளி உள்ளார் சன்னி லியோன்.

கொரோனா வைரஸ் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு பரவாமல் தடுக்க ஒரே வழி, அந்த வைரஸ் கட்டுக்கொள் வரும் வரை யாரும் வெளியே செல்லாமல் இருப்பது மட்டுமே என பிரதமர் மோடி அறிவுறுத்தியதை வலியுறுத்தும் விதமாக வீட்டிலேயே பத்திரமாக இருங்க என நடிகை சன்னி லியோன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஆபாச நடிகையாக இருந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில், சன்னி லியோன் பதிவிட்ட, செம கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்த இந்த ரசிகர், எப்படி மேடம், இவ்ளோ ஹாட்டாகவும் இருக்கீங்க, இப்போ சேலையில், இவ்ளோ க்யூட்டாகவும் இருக்கீங்க என கேள்வி எழுப்பியுள்ளார்.

21 நாட்கள் வீட்டில் எப்படி சும்மா முடங்கி கிடப்பது என எண்ணிய பாலிவுட் நடிகை சன்னி லியோன், வீட்டிலேயே வொர்க்கவுட் செய்யவும் முடிவெடுத்துள்ளார்.

தனியாக வொர்க்கவுட் செய்ய தன்னால் முடியாது என நினைத்த சன்னி லியோன், தனது வொர்க்கவுட் பார்ட்னரான உஷ்மாவுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

மேலும், குடி பத்வா, உகாதி, சேத்தி சந்த் என நேற்று கொண்டாடப்பட்ட வருடப் பிறப்புகளுக்கு தனது வாழ்த்துக்களையும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே