அச்சிலேற்ற முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால் ட்வீட்…; இயக்குநர் சீனுராமசாமி பேட்டி..!!

சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர் என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் சீனுராமசாமி செய்தியாளர் சந்திப்பில், “முத்தையா முரளிதரன் குறித்த படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதியிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அவர் தமிழ் இன மக்களுக்கு எதிராக மாறவேண்டாம் என்றும் அவர் நலன் கருதியே நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக கூறி செய்திகள் சித்தரிக்கப்படுகின்றன.

எனக்கு அரசியல் சினிமா எடுக்கத் தெரியும்.

சினிமாவில் உள்ள அரசியல் தெரியாது. எனக்கு கடந்த 4 நாட்களாக வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல் வந்துகொண்டு இருக்கின்றன.

சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர். தொடர்ந்து அச்சுறுத்தல் வந்துகொண்டிருப்பது எனக்குபதற்றத்தை ஏற்படுத்தியது. ‘நன்றி, வணக்கம்’ என கூறியதன் அர்த்தம் என்ன என விஜய்சேதுபதியிடம் கேட்டேன்.

அத்துடன் அவரை நேரில் சந்தித்தும் பேசினேன். ஆனாலும் எனக்கு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இதை யார் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கவுள்ளேன்” என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே