விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் பாக்யராஜுக்கு சம்மன்!

பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், விசாரணைக்கு ஆஜராகுமாறு இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ்-க்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் இளைஞர்களிடம் மட்டுமில்லாமல், பெண்களிடமும் தவறு உள்ளதாக இயக்குனர் பாக்யராஜ் பேசியிருந்தார்.

இவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

மேலும் பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆந்திர மகளிர் ஆணையம் தமிழ்நாடு மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில் பாக்யராஜ் பேச்சு குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த தமிழ்நாடு மகளிர் ஆணையம், இயக்குனர் பாக்யராஜ் வரும் 2-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே