2020-ம் ஆண்டில் தோன்றும், இந்த சந்திரகிரகணம் இரண்டாவது சந்திரகிரகணம்.
சந்திரகிரகணம் என்பது, சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
2020-ம் ஆண்டில் இந்த சந்திரகிரகணம் இரண்டாவது சந்திரகிரகணம் ஆகும்.
இந்த சந்திர கிரகணம் இன்று மற்றும் நாளை இடைப்பட்ட இரவில் தோன்றுகிறது.
இந்திய நேரப்படி இன்று இரவு 11.15 மணி முதல், நாளை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும்.
மேலும், வானிலையில் எந்த மாற்றமின்றி தெளிவாக இருக்கும்பட்சத்தில் இந்தியாவில் இதனை முழுமையாக காண முடியும்.
ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.
இன்று நடைபெறும் சந்திரகிரகணமானது முழுமையான சந்திர கிரகணம் அல்ல.
ஏன்னென்றால், இந்த கிரகணத்தின் போது சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை.
மேலும், கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் புறநிழல் மட்டுமே சந்திரனின் மீது விழும்.
இதே போன்ற புறநிழல் நிலவு மறைப்பு என ழைக்கப்படுகிறது. இதற்கு முன் 2020-ம் ஆண்டு ஜனவரியில் சந்திர கிரகணம் உருவானது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.