ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு முன்பதிவு சீட்டு கட்டணத்தை இன்று முதல் திரும்ப பெறலாம்

விரைவு ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்து ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களுக்கான கட்டணத்தை முன்பதிவு மையங்கள் மூலம் இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொதுமுடக்கம் காரணமாக ஜூன் 30 வரை ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இதில் நேரடியாக சென்று டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட் ரத்து கட்டணத்தை பெற வசதியாக, முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன.

எனவே, சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட 19 முன்பதிவு மையங்கள் இன்று முதல் திறக்கப்பட்டு, டிக்கெட் ரத்துக் கட்டணத்தை பொது மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூட்டத்தைத் தவிர்க்க, பயணம் செய்ய திட்டமிடப்பட்ட தேதி அடிப்படையில் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 31 ஆம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்தோர், ஜூன் 5 முதல் முன்பதிவு மையங்களுக்குச் சென்று தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்ச்சியாக,

01.04.2020 – 14.04.2020 டிக்கெட்களுக்கு –ஜூன் 12 முதல்
15.04.2020 – 30.04.2020 டிக்கெட்களுக்கு — ஜூன் 19 முதல்
01.05.2020 – 15.05.2020 டிக்கெட்களுக்கு– ஜூன் 26 முதல்
16.05.2020 – 31.05.2020 டிக்கெட்களுக்கு — ஜூலை 3 முதல்
01.06.2020 – 30.06.2020 டிக்கெட்களுக்கு — ஜூலை 10 ஆம் தேதி முதல் முன்பதிவு மையங்களுக்குச் சென்று டிக்கெட் கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

முன்பதிவு மையங்கள் திறக்கப்படும் ரயில் நிலையங்கள்:

சென்னை சென்ட்ரல்
எழும்பூர்
சென்னை கடற்கரை
திருமழிசை
மாம்பலம்
செயின்ட் தாமஸ் மவுண்ட்
தாம்பரம்
செங்கல்பட்டு
திண்டிவனம்
பெரம்பூர்
ஆவடி
திருவள்ளூர்
அரக்கோணம்
காட்பாடி
வாலாஜா ரோடு
ஆம்பூர்
குடியாத்தம்
வாணியம்பாடி
ஜோலார்பேட்டை.

முன்பதிவு மையங்களுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

முகக்கவசம் அணியாமல் வரும் நபர்கள் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2818 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே