ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு பிரத்யேக உணவுகள்

இஸ்ரோ சார்பில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் மிஷன் ஆன ககன்யான் மூலம் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு ஏற்ற இந்திய உணவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

ககன்யான் விண்வெளிப் பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர்களுக்காக இந்திய உணவுகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

விண்வெளிக்குச் சென்று சாப்பிட இட்லி, காய்கறி புலாவ், வெஜ் ரோல், முட்டை ரோல், உப்மா, பாசிப்பயிறு அல்வா ஆகியன கொண்ட உணவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த உணவுப் பட்டியலை மைசூரில் உள்ள பாதுகாப்பு உணவு ஆய்வு மையம் தயாரித்துள்ளது.

Exclusive dishes for Indian players going into space through the Kaganyan program

விண்வெளி வீரர்களுக்கு உணவு பதார்த்தங்களை சூடு செய்து சாப்பிட ஹீட்டர் கூட விண்வெளி ஏவுகணையில் வைத்து அனுப்பப்பட உள்ளது.

மேலும் பால் மற்றும் பழச்சாறுகளும் ககன்யான் வீரர்களுக்காக ஏவுகணையில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

உணவுகளை சாப்பிட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் தரப்பட உள்ளன. ஏவுகணையில் ஜீரோ புவியீர்ப்பு விசைக்கு ஏற்ற கழிவுகளை அகற்றும் அமைப்புகள் அமைக்கப்பட உள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே