திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன்.
புதுக்கோட்டை சுற்றுப்பகுதிகளில் சனிக்கிழமை இரவுகளில் ஆடுகள் திருடப்பட்டு வந்தன. இதனையடுத்து இந்த திருட்டை கண்டுபிடிக்க சிறப்பு ஆய்வாளராக பூமிநாதன் நியமிக்கப்பட்டார்.
திருட்டுகும்பலை பிடிக்க இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் பூமிநாதன். இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் ஆடு திருடும் கும்பலை தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டினார். அப்போது சராமாரியாக அவரை வெட்டி சாய்த்தது அந்த கும்பல்.இந்த கொலை குறித்து விசாரிக்க 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார் திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன். இந்த படுகொலை குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும், சோகமும் ஏற்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அச்சமும் பொதுமக்கள் இடையே பீதியை உருவாக்கியுள்ளது.