திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞர் மீது ஆசிட் வீசிய திருமணமாகிய பெண்..!!

திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்றுள்ள பெண்ணொருவர். இளைஞர் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் அவருக்கு ஆசிட் வீசியுள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி அடுத்த அடிமாலி எனும் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண் தான் ஷீபா. இவருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த இளைஞர் அருண்குமார் என்பவருக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக பேஸ்புக்கில் பேசி வந்த இருவரும் அதன்பின் காதலிக்க தொடங்கியுள்ளனர். அதன் பின் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

இந்நிலையில் ஷீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அருண்குமார் இவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஷீபா வற்புறுத்தி உள்ளார். ஆனால் சிவா திருமணமானவர் என தெரியவந்ததால் ஷீபாவுடன் பேசுவதையே அருண்குமார் தவித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஷீபா, அருண்குமாரை சமாதானப்படுத்தி பேச அழைப்பது போல அழைத்து உள்ளார்.

அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அருண் குமார் மீது வீசியுள்ளார். இதில் அருண்குமாரின் முகத்தில் ஆசிட் பட்டதும் அலறியடித்து துடிக்கவே அக்கம்பக்கத்தினர் அனைவரும் ஓடி வந்து அருண்குமாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அதன் பின் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக போலீசார் காவல் துறையில் புகார் அளித்ததுடன் அருண்குமாரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அப்பொழுது ஷீபாவுக்கும் தனக்கும் காதல் இருந்ததாகவும், ஆனால் திருமணத்துக்கு மறுத்ததால் அவர் என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார். நான் பணம் கொடுக்க மறுத்ததால் ஆசிட் வீசினார் எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஷீபா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே