திருச்செந்தூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக விசாரணையில் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிரச்சியை எற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கல்வலை என்னும் கிராமம் உள்ளது. இங்குள்ள காட்டுப்பகுதியில் புதனன்று 7 வயது சிறுமி ஒருத்தியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து சேர்ந்தனர்.

போலீஸ் விசாரணையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதுதொடர்பாக அருகிலுள்ள மாணிக்கபுரத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே