ஸ்விக்கி ஆர்டரில் முதலிடம் பிடித்த பிரியாணி..!!

2020 ஆம் ஆண்டு இந்தியர்களின் பிடித்தமான உணவு சிக்கன் பிரியாணி எனவும் ஒவ்வொரு வினாடிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

ஸ்விக்கியில் ஒரு வெஜ் பிரியாணி ஆர்டர் செய்யப்படும் அதேநேரத்தில் 6 சிக்கன் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகின்றன.

சிக்கன் பிரியாணி இந்தியாவின் விருப்பமான உணவு என்பது இதன் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்விக்கி ஆண்டுதோறும் வெளியிடும் ‘ஸ்டேட்இட்ஸ்டிக்ஸ்’ தரவுகளின்படி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து ஸ்விக்கியின் புதிய வாடிக்கையாளர்களாகியுள்ளனர்.

ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் அலுவலக முகவரிகளைவிட வீட்டு முகவரிக்கு 5 மடங்கு அதிகமாக ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 9 மடங்கு உயர்ந்துள்ளது.

அதேபோன்று வீட்டிலிருந்து வேலை செய்யும் பலர் டீ மற்றும் காபியை அதிகம் ஆர்டர் செய்துள்ளனர்.

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் 2 லட்சம் பானிபூரி ஆர்டர்களும் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஸ்விக்கி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ‘ஸ்விக்கி ஹெல்த்ஹப்’ என ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் பட்டியல் அடங்கிய ஒரு செயலியை தனது வாடிக்கையாளருக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் பயனாக தலைநகர் தில்லியில் உள்ள மக்கள் அதிகமாக சத்தான உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர்.

அதேபோன்று பெங்களூருவிலும் 130 சதவீதம் அதிகமாக மக்கள் சத்தான உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர்.

இதுகுறித்த ஆய்வில் மேலும் சில தகவல்களும் வெளிவந்துள்ளன.

இரவு உணவிற்கு மக்கள் சராசரியாக எடுத்துக்கொண்ட உணவு 342 கலோரிகள். மதிய உணவு 350 கலோரிகளுக்குக் குறைவாக இருந்தது.

அதே நேரத்தில் காலை உணவாக மக்கள் சராசரியாக 427 கலோரிகளை உட்கொண்டனர்.

அத்தியாவசியப் பொருள்கள், மளிகைப் பொருள்கள் விநியோக சேவையான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் 2020ல் 75,000 கிலோ வெங்காயம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் குறுகிய தூர டெலிவரியாக பெங்களுருவில் 600 மீட்டரும் நீண்ட தூர டெலிவரியாக கொல்கத்தாவில் 39 கிமீ தூரமும் இருந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே