மின் தடைகளை சரி செய்ய வரும் பணியாளர்கள் யாரேனும் பணம் கேட்டால் பொதுமக்கள் மின்வாரிய அதிகாரியிடம் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏதேனும் தளவாட சாமான்கள் வாங்க வேண்டும் என்று பணியாளர்கள் பணம் கோரினால் சென்னை அண்ணாசாலையிலுள்ள மின்சார வாரிய விழிப்புப் பணி அலுவரிடம் புகார் அளிக்கலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலுத்த வேண்டிய தொகை எதுவாயினும் உரிய ரசீது பெற்று நேரடியாகவோ, இணையதளம் வாயிலாகவோ செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே