பாதுகாப்பு கேட்டு கவுதம் கம்பீர் கடிதம்..!!

முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர் மற்றும் குடும்பத்தாருக்கு சர்வதேச நம்பரில் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக காவல்துறை அதிகாரிக்கு கம்பீர் கடிதம் அனுப்பியுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளார்.

பாஜகவில் இணைந்த கவுதம் கம்பீர் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக எம்பி ஆனார்.

இந்நிலையில், வெளிநாட்டு போன் நம்பரில் இருந்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக ஷாதரா மாவட்ட துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில் உரிய பாதுகாப்பு வழங்க கோரியுள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே