சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த மாதம் 15ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

ஆனாலும் இன்று கோவிலில் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

ஐயப்பனுக்கு சார்த்தி அழகுபார்க்கும் பந்தள மகாராஜா வழங்கிய 453 பவுன் தங்க அங்கி தேர் பவனி கடந்த 22ஆம் தேதி பத்தனம்திட்டா ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது.

அது நேற்று சன்னிதானம் வந்தடைந்தது.

பூஜைகளுக்குப்பின் ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்திய மகா தீபாராதனை நேற்று மாலை நடந்தது.

இன்று காலை 11.40க்கும் மதியம் 12.20க்கும் இடையில் உள்ள சுப முகூர்த்தத்தில் தங்க அங்கி சார்த்திய ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடக்கிறது.

இன்று அடைக்கப்படும் நடை மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டு 2021 ஐனவரி 19ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 

டிசம்பர் 31ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும் பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனமும் நடைபெறும் என தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே