திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்த 28ம் தேதி கந்த சஷ்டிப் பெருவிழா கோலாகலமாக தொடங்கியது.
இதனையொட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு சென்று தங்கி விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
கடலோரத்தில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகிறார்கள்.
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.