அரசு சார்பில் திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாடப்பட மாட்டாது என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் திப்புசுல்தான் குறித்து பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள பகுதியை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.
திப்புசுல்தான் விடுதலைப் போராட்ட வீரராக தாம் கருதவில்லை என்று அவர் திப்பு சுல்தான் தொடர்பான அனைத்தையும் நீக்க உள்ளதாகவும் கூறினார்.