குடியுரிமை சட்டம் குறித்து மக்களை திசை திருப்பி குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் ஸ்டாலினுடைய கனவு பலிக்காது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னரே அதில் உள்ள நன்மை தீமைகள் தெரியவரும் எனக் கூறினார்.
புலி வரும் கதை போல வராத ஒன்றை வருவதாக சொல்வது திமுகவினருக்கு கைவந்த கலை என விமர்சித்தார்.
இதனை நம்பி மாணவர்கள் திசை மாறிவிடக் கூடாது என்றும் அமைச்சர் உதயகுமார் கேட்டுக்கொண்டார்.