சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் சுஜித் உயிரிழந்தது துரதிஷ்டவசமானது என்றார்.
சுஜித்தை காப்பாற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாகவும், ஆனால் முடிவு எதிர்மறையாக கிடைத்து விட்டதாகவும் கூறினார்.
சுஜித்தின் உடலை காட்சிப்படுத்தாதது தொடர்பான சர்ச்சைக்கு பதிலளித்த அவர், சடலத்தை மீட்பது குறித்த மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டதாக விளக்கமளித்தார்.
கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த சிறார்களின் சடலங்களை காட்சிப்படுத்தியதால் உலக அளவில் விமர்சனத்திற்கு ஆளானதை அவர் சுட்டிக்காட்டினார்.
சுஜித்தை மீட்கும் பணிக்கு 11 கோடி ரூபாய் செலவானதாக தாம் கூறியதை போன்ற வாட்ஸ்அப்பில் பரவும் தகவல் வதந்தி என்றும் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்தார்.