தண்ணீரை சேமிக்க தவறினால் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் போல சென்னையும், கொல்கத்தாவும் தண்ணீர் இல்லா நகரமாக மாறும் என ஜல்சக்திதுறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நீர் இருப்பும், விநியோகமும் சிறப்பானதாக இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
சென்னை பெங்களூர் மட்டுமின்றி நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் தண்ணீர் இல்லாத பகுதியாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நதியை தெய்வமாக மதிக்கும் இந்தியாவில் தான் அதிகம் மாசுபடும் நீர் நிலையாக நதிகள் இருக்கின்றன என்றும் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்துள்ளார்.