தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்..!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

இதையடுத்து நாகலாந்து மாநில ஆளுநராக இருந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டு கடந்த 18ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் ஆளுநராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று காலை அவர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

தலைநகரில் 2 நாட்கள் தங்கியிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற 5 நாட்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே