இதைத்தான் கடந்த 6 மாதங்களாக பாஜக செய்து வந்துள்ளது – ப.சிதம்பரம்

மக்களை பிளவுபடுத்தும் செயல்களை மட்டுமே கடந்த 6 மாதங்களாக பாஜக செய்து வந்துள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொருளாதார பிரச்சினையில் இருந்து மக்களை திசைதிருப்பவே 370-வது சட்டப்பிரிவு நீக்கம், குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றை பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக குறை கூறினார்.

இந்தியாவை ஜெர்மனியாக மாற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய சிதம்பரம், வளரும் நாட்டில் பைத்தியக்காரத்தனமான பிரச்சினைகளை உருவாக்குவது பேதமை என்றும் விமர்சித்தார்.

ஜார்க்கண்ட் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருப்பது இந்த தருணத்தில் அவசியமானது என்றும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே