அதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கேக் வெட்டியும் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் புனித பாத்திமா தேவாலயத்தில் உள்ள கருணை இல்லத்தில், அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டுக்குப் பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பார்வையிட்டனர்.
பின்னர் கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள் முன்னிலையில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் பரிசுகளை வழங்கி, அவர்களுடன் அமர்ந்து அனைவரும் உணவு அருந்தினர்.