தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உள்துறை மந்திரி அமித்ஷா தனியார் செய்தி நிறுவனத்துக்கு இன்று பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும், தேசிய மக்கள் தொகை பதிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை.
அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவது குறித்து இதுவரையில் விவாதிக்கவில்லை.
NRC-க்கும், NPR-க்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனை நான் இன்று உறுதியாக கூறுகிறேன் என்று விளக்கமளித்துள்ளார்.