கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதிக்கு சென்று பார்வையிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு சென்ற அவர், பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மக்கள் நலத் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

பூம்புகார் நகரில் பூங்கா அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் இலவசமாக கண் பார்வை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 20க்கும் மேற்பட்டோருக்கு மூக்கு கண்ணாடிகளையும், புடவைகளையும் வழங்கினார்.

இதனை தொடர்ந்து மாநகராட்சி விளையாட்டு திடலுக்கு சென்ற மு க ஸ்டாலின், அங்கு சிறிது நேரம் பேட்மிண்டன் விளையாடினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே