தேநீர் எடுத்து வந்த மாநிலங்களவை துணைத்தலைவர்; பிரதமர் மோடி புகழாரம்..!!

மாநிலங்களவையில் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய எம்.பி.க்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள் 2-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்த எம்.பிக்களுக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் தேநீர் கொண்டு வந்தார்.

ஆனால் ‘தேநீர் தந்திரம்’ என்று கூறியும் ஹரிவன்ஷ் ‘விவசாயிகளுக்கு எதிரானவர்’ என்றும் கூறி அவர் கொண்டு வந்த தேநீரை அவர்கள் மறுத்தனர்.

இந்நிலையில் மாநிலங்களவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் செயலை பிரதமர் மோடி ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளார்:

‘தன்னை தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தானே தேநீர் கொண்டு வந்து கொடுப்பது, தர்ணாவில் ஈடுபட்டவர்களுக்கு தேநீர் அளிப்பது ஹரிவன்ஷ்ஜி எளிமையான மனம் மற்றும் பெரிய இதயம் கொண்டவராக ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பதையே காட்டுகிறது. 

இது இவரது மகத்துவத்தைக் காட்டுகிறது.

ஹரிவன்ஷ்ஜியைப் பாராட்டும் இந்திய மக்களுடன் நான் இணைகிறேன்.

ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரையும் பெருமைப்படுத்தும் செயல் ஹரிவன்ஷ்ஜியினுடையது’

என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

தேவைப்படும் வாக்குகள் இன்றியே எப்படி விவசாய மசோதாக்களை நிறைவேற்ற முடியும் என்பதற்கான காரணங்களை பிரதமர் மோடி கூறும்வரை போராட்டம் தொடரும் என்று ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2818 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே