பிரபல இசைக்குழுவான லக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகமெங்கும் இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகளை நடத்தி வரும் பிரபல இசைக்குழு லக்ஷ்மன் ஸ்ருதி. இதன் உரிமையாளர் லக்ஷ்மணன் மற்றும் ராமன் சகோதரர்கள்.
சென்னையில் உள்ள அசோக் நகரில் சொந்த வீட்டில் வசித்து வந்த ராமன் திடீரென நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல இசைக்குழுவின் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.