NPR எனப்படும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டைப் புதுப்பிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டைப் புதுப்பித்தல் என்பது வழக்கமான நடைமுறைதான்.

அதுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னெடுக்க உதவும்.

மேலும் அரசின் மக்கள் நலத் திட்டத்தின் பயனாளர்களை அடையாளப்படுத்த உதவும்.

2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பிரிவு 14-ஏயை சேர்த்து குடியுரிமைச் சட்டம் 1955-யை திருத்தியதன் மூலம் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் கட்டாயம் மத்திய அரசு பதிவு செய்து வைத்திருக்கவேண்டும். மேலும் அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கவேண்டும்.

மாநிலம், மாவட்டம், கிராமம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் கணக்கெடுக்கப்படுகின்றனர்.

அரசின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த NPR மிகவும் உதவும். சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த NPR தகவல்கள் மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.

சாதி பொருளாதார அடிப்படையிலான கணக்கெடுப்பு NPR தகவல்கள் அடிப்படையிலானது. அதேநேரத்தில் அந்த தகவல்கள் வெவ்வேறு விதமான பயனாளர்களை அடையாளம் காண்பதற்கும் உதவியாக உள்ளது.

வீடு வைத்திருப்பவர்கள் தொடர்பான தகவல்கள் மூலம், ஆயூஸ்மான் பாரத், ஜன்தன் யோஜனா, பிரதமர் ஆவாஸ் யோஜ்னா, உஜ்வாலா யோஜனா ஆகிய திட்டங்களின் பயனாளர்களை அடையாளம் காண்பதற்கு உதவும்.

NPR-ன் தகவல்கள் தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, மணிப்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டது.

தற்போதுவரை தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான பணி இதுவரையில் தொடக்கப்படவில்லை. உடற்அங்கங்கள் சார்ந்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை.

பாஸ்போர்ட் எண், ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் போன்ற தகவல்களை விருப்பம் இருந்தால் அளிக்கலாம்.

வாஜ்பாய் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் கார்கில் போர் குறித்து ஆலோசனை செய்வதற்கு 2000-ம் ஆண்டில் மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு இந்தியக் குடிமக்களுக்கு கட்டாயம் பதிவு இருக்கவேண்டும். மேலும், சட்டவிரோத குடியேறிகளுக்கு பதிவு இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

எல்லா குடிமகன்களுக்கும் பலதேவைகளை உள்ளடக்கிய அடையாள அட்டை வழங்கப்படவேண்டும்.

குடிமக்கள் அல்லாதவர்களுக்கு வேறு நிறத்தில் வேறு வடிவத்திலும் அடையாள அட்டை வழங்கப்படவேண்டும்.

அந்த அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை 2001-ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பான நடைமுறைகள் 2003-ம் ஆண்டு நிறுத்திவைக்கப்பட்டது. 2004-ம் ஆண்டு 14-ஏ பிரிவை சேர்ந்ததன் மூலம் குடியுரிமை சட்டம் 1955 திருத்தப்பட்டது.

2015-16-ம் ஆண்டுகளில் அசாம், மேகாலயா தவிர நாடு முழுவதும் NPR புதுப்பித்தல் செய்யப்பட்டது.

பல தேவைகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் குறிப்பிட்ட நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடற்கரை பகுதி மக்களுக்கான NPR, மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற பிறகு கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க கடற்கரை NPR அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் 65.50 லட்சம் குடும்பத்துக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

வீட்டுக்கு வீடு கணக்கெடுத்து, வீட்டிலுள்ள ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிறப்புத் தகவல்களை சேகரிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது.

பின்னர் இந்தத் திட்டம் 2011-ம் ஆண்டு ஒவ்வொரு கைரேகை உள்ளிட்ட அங்கத் தகவல்களையும் பதிவிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே