மதுரையில் தெப்பத் திருவிழா கோலாகலம்..!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா, காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

கோயிலில் இருந்து, பஞ்ச மூர்த்திகளுடன் மீனாட்சி அம்மனும், உற்சவர் சுந்தரேஸ்வரரும் தெப்பக்குளத்தில் எழுந்தருளுகின்றனர்.

தெப்பத்திருவிழாக்காக வைகை ஆற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் 400 ஆண்டுகள் பழமையான பனையூர் வாய்க்கால் வழியாக நீர் கொண்டுவரப்பட்டு தெப்பகுளம் நிரப்பப்பட்டுள்ளது.

இதனால் தெப்பக்குளம் கடல் போல் காட்சியளிக்கிறது. 

திருவிழாவை நேரில் கண்டு மகிழ்வதற்காக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே குவிந்துள்ளனர்.

பாதுகாப்பு பணியில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடந்த பின்னர் இன்று ஒருநாள் முழுவதும் கோயில் நடை சாத்தப்படும் என்றும்; சுற்றுலாப் பயணிகளுக்காக ஆயிரங்கால் மண்டபத்தைப் பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே