திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தின் 8ம் நாளான இன்று தேரோட்ட நிகழ்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 30ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் ஒவ்வொரு விதமான வாகனங்களில் பூ தேவி, ஸ்ரீதேவி தாயார்களுடன் மலையப்ப சாமி எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்நிலையில் பிரமோற்சவத்தின் 8ம் நாளான இன்று தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

மகாரதம் எனப்படும் தேரில் மலையப்ப சாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் பவனி வந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்து மலையப்ப சாமியை வழிபட்டனர்.

தேரோட்டத்தின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று இரவு தங்க குதிரையில் கல்கி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே