டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அரசு ஊழியர்கள் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வைத் தொடர்ந்து, குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு நடந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதில் இடைத்தரகர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அதிகாரி நாராயணன், சென்னை ஆயுதப்படை காவலர்கள் சித்தாண்டி, பூபதி மற்றும் அரசு ஊழியர்கள் என 34 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் மற்றும் மயிலாடுதுறையில் அரசு அலுவலர்களாக பணியாற்றி வரும் இருவரிடம் சிபிசிஐடி போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இருவரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இதனால் இதுவரை கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அரசு அலுவலர்கள் மூலம் பலர் முறைகேடாக பணியில் சேர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதால் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.