கிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை மூடல்!

வளைய வடிவ சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை இன்று மதியம் 2 மணி வரை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை நேற்றிரவு 11 மணிக்கு மூடப்பட்ட நிலையில் 13 மணி நேரத்திற்கு பின்னர் இன்று மதியம் 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது.

முன்னதாக இன்று பிற்பகல் 12 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்பட்டு ஆகம முறைப்படி அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்து பரிகார பூஜைகள் நடத்தப்பட உள்ளன. 

அதன் பின்னர் வழக்கம்போல் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நடை சாத்தப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே