தூய்மைப்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார் தேனி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம்

தேனி புது பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள பூங்கா பகுதிகளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தேனி வைகை அரிமா சங்கம், சோல்ஜர்ஸ் அகாடமி இணைந்து பூங்கா பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிநடைபெற்றது.

இந்த தூய்மை பணியினை மாவட்ட செஞ்சிலுவைச் சங்க தலைவர் தியாகராஜன், தேனி வைகை அரிமா சங்க மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமினை நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் டாக்டர் ஜெயச்சந்திரன், தேனி சோல்ஜர்ஸ் அகாடமி நிறுவனர் சின்னசாமி, அரிமா சங்கங்களின் தேனி மாவட்ட செயலாளர் ரவி, தேனி அரிமா சங்க தலைவர் செந்தில் குமரன், செயலாளர் சேதுநடேசன், பொருளாளர் ரஞ்சித்குமார், மனிதநேய அறக்கட்டளை நிர்வாகி சர்ச்சில் துரை, வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகி சிதம்பரம், அப்துல்கலாம் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன், தேனி அரிமா சங்க இயக்குனர் மணிகண்டன், செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுருளி வேல், சோல்ஜர்ஸ் அகாடமி மாணவர்கள் மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நமது செய்தியாளர் : C. பரமசிவம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே