சென்னை தி.நகரில் உள்ள பிரபல பத்திரிகை நிறுவனமான டைம்ஸ் ஆஃப் இந்தியாவில், பாட்டாளி மக்கள் கட்சியியைச் சேர்ந்த வினோபா தலைமையிலான குழுவினர் அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற செயல்பாடுகளில் உறுப்பினர்களின் பங்கேற்பு மற்றும் வருகை உள்ளிட்ட தகவல்கள் அரசுத் தரப்பில் நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இதில் தமிழக எம்.பி.,க்களில் மிக மிக மோசமாக செயல்பட்ட எம்.பி.யாக அன்புமணியின் பெயர் இடம்பெற்றுள்ளது என்பதையும், இவர் 15 சதவீதம் மட்டுமே அவை செயல்பாடுகளில் பங்கேற்றுள்ளார் என்பதையும் விளக்கி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாள் வெளியிட்டிருந்தது.
மேலும், இந்த ஆண்டு வெறும் 2 விவாதங்களின் போது மட்டுமே அவையில் இருந்துள்ளார். அப்போதும் எந்த கேள்வியையும் கேட்வில்லை.
எந்த தனிநபர் மசோதாவையும் கொண்டு வரவில்லை ஆகிய தகவல்களை, நாடாளுமன்ற அவைகளுக்கான அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களுடன் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், சென்னையில் உள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை அலுவலகத்துக்கு ஆட்களுடன் சென்ற பாமக வினோபா தலைமையிலான பாமகவினர் குழு, அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் பத்திரிகையாளர்களையும் மிரட்டியுள்ளனர்.
இப்படி பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
எம்.பி.க்களின் நாடாளுமன்ற செயல்பாட்டை குறித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு உரிமை உண்டு.
தாக்குதல் நடத்திய பாமகவினர் மீது தமிழக அரச் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இதனைக் கண்டித்துள்ளார்.