NLC அனல்மின் நிலைய விபத்தில் தொழிலாளர்கள் இறந்தது வேதனை அளிக்கிறது – அமித்ஷா

நெய்வேலி NLC -ல் உள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த, விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், நெய்வேலி NLC-யில் ஏற்பட்ட விபத்து மன வேதனையை அளிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பாக தமிழக முதலமைச்சரிடம் பேசினேன். மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என உறுதி அளித்தேன். 

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே