பிரதமரின் முகவரியைக் கொடுங்கள் – அருந்ததி ராய்

என்.பி.ஆர் விவகாரத்தில் உங்கள் வீட்டுக்கு வந்து முகவரி கேட்டால் பிரதமரின் முகவரியைக் கொடுங்கள் என்று இந்திய பெண் எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.

நாடு முழுக்க ஓயாத கவலையாக உருவெடுத்துள்ளது தேசிய குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் நாடு தழுவிய அறிவிப்பு.

இதனை எதிர்த்து மேற்கு வங்கம், பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடந்தன.

இதனைத் தொடர்ந்து மக்கள்தொகைப் பதிவேட்டை மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நிறுத்தி வைத்தன.

இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அருந்ததி ராய் பேசியது வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.

அவர் பேசியதாவது என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகைபதிவேடு என்.ஆர்.சி.க்கான தரவுத்தளமாக பயன்படுத்தப்படும். அதனால் என்.பி.ஆர். தகவல்களுக்காக உங்கள் வீட்டுக்கு ஆட்கள் வரும் சமயம் தவறான தகவல்களைக் கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முகவரி என்று கேட்டால் நம்பர் 7, ரேஸ் கோர்ஸ் ரோடு என்ற முகவரியைக் கொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இது பிரதமரின் முகவரி என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே