சுய ஊரடங்கை முன்னிட்டு நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மாா்ச் 22-ஆம் தேதி சுய ஊரடங்கு நடவடிக்கையை பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தாா்.
மேலும், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் வலியுறுத்தினாா்.
அவரது கோரிக்கையை ஏற்று அன்றைய தினம் தமிழகத்தில் நாள் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இத்தகவலை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே தமிழத்தில் நாளை அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.