கோழிக்கோடு விமான விபத்து : யார் இந்த தீபக் வசந்த் சாத்தே??

இந்தியாவின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நேற்று இரவு துபாயிலிருந்து 191 பேருடன் வந்த ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் கேரளாவின் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, விழுந்து விபத்துக்குள்ளானது.

கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியான, விங் கமாண்டர் தீபக் வசந்த் சாதே இந்திய விமானப் படையின் முன்னாள் பைலட்டாக இருந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கேப்டன் தீபக் வசந்த் சாத்தே விமான படை 58வது பிரிவை சேர்ந்தவர் என இந்திய விமானப்படையின் ஜூலியட் படைப்பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஏர் மார்ஷல் பூஷண் கோகலே (ஓய்வு) தெரிவித்தார்.

தீபக் வசந்த் சாத்தே ஜூன் 1981 இல் ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியிலிருந்து தேர்ச்சி பெற்றுள்ளார். 

அவர் ஒரு சிறந்த ஸ்குவாஷ் வீரராக வீரரும் கூட. 58 NDA தங்கப் பதக்கத்தை ஜனாதிபதியிடம் பெற்றுள்ளார்.

இந்திய விமானப் படையில் சோதனை பைலட்டாக இருந்தவர்.

ஏர் இந்தியாவுக்காக கேப்டன் சாதே கமரர்சியல் விமானியாக மாற முடிவு செய்வதற்கு முன்பு அவர் ஒரு திறமையான போர் விமானியாக இருந்தார் என அவருடன் பணியாற்றிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதிக மழை காரணமாகவும் ஓடுதளம் சரியாக தெரியவில்லை என்பதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து நேற்று இரவு 7.40 மணியளவில் நடந்த இந்த விபத்தில், விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது.

விமானத்தில் பயணித்தவர்களில், விமானி விங் கமாண்டர், தீபக் வசந்த் சாதே உள்பட 18 பேர் பலியாகி உள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே