முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்றிரவு நடைபெற்ற வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நம்பிநாயர் பட்டர் பரிவட்டம் கட்டி, கோவர்த்தனாம்பிகையிடம் வேல் அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் கோயில் ஸ்தானிகப்பட்டர், சுப்பிரமணியசுவாமிக்கு நவரத்தின சக்திவேலை அளித்து சிறப்பு தீபாராதனை செய்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயத்தில் சூரசம்ஹார விழா கடந்த 28ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது.

நேற்றிரவு ஆலயத்திற்குள் எழுந்தருளிய முருகன் அன்னை வேல்நெடுங்கண்ணி இடம் சக்தி வேல் பெற்றபோது முருகனின் சிலை முழுவதும் வியர்வைத்துளிகள் ஏற்பட்டது.

திருவாரூர் கீழரத வீதியில் அமைந்துள்ள பழனியாண்டவர் ஆலயத்தில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு மூலவர் பழனியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சண்முகர் அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே