தமிழகத்தில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

மஹா புயல் அரபிக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அவர் கூறினார்.

இதேபோல மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை என்றும் புவியரசன் குறிப்பிட்டார்.

வரும் 3ஆம் தேதி அந்தமான் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகி அடுத்த 2 நாட்களுக்கு பிறகு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு திசையில் நகரும்.

இதனாலும் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என்று புவியரசன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே