மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு..!!

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு வழிபாட்டிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறக்கப்படுகிறது. 

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம் என்ற நிலையில், இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டு மேல்சாந்திகள் பதவியேற்கவுள்ளனர். நாளை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி கோயிலுக்கு வரவுள்ள நிலையில், இணைய வழி அனுமதி மூலம் தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

image

கனமழை எச்சரிக்கை காரணமாக நேரில் வந்து பதிவு செய்யும் வசதி தற்காலிகமாக 3 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார். பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் பக்தர்கள் நீராட அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதி வரையும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே