கல்லறை தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி

கல்லறை தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கல்லறைத்திருவிழா கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நவம்பர் 2ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி புதுச்சேரியில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கு சென்று கிறிஸ்தவர்கள் அங்கு கல்லறைகளுக்கு முன் மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

புதுவையில் உள்ள பெரிய கல்லறை தோட்டமான உப்பளத்தில் ஏராளமானோர் வந்திருந்து தங்கள் முன்னோர்கள் மற்றும் உயிரிழந்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கல்லறை தினத்தையொட்டி சீனிவாசபுரத்தில் இருக்கும் கல்லறை தோட்டத்தில் திருப்பணி நடந்தது.

திருப்பணியில் வட்டார அதிபர் சகாயராஜ் தலைமையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பங்கு தந்தைகள் நிகழ்த்தினர்.

இதில் கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள் உயிரிழந்தவர்களுக்கு பிடித்தமான உணவுகளை வைத்து வழிபட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே