தொடர்ந்து 3,000 புள்ளிகள் சரிவு, 2,000 புள்ளிகள் சரிவு எனப் போய் கொண்டிருந்த சென்செக்ஸ், தற்போது நிலையாக நின்று ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
நேற்று மாலை 28,535 புள்ளிகள் நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று காலை 29,073 புள்ளிகளில் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.
அதோடு தொடர்ந்து புதிய புதிய உச்சப் புள்ளிகளைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது.
தற்போது அதிகபட்சமாக 29,759 புள்ளிகளைத் தொட்டு 1,200 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி, நேற்று 8,317 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது, இன்று 8,451 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி அதிகபட்சமாக 8,655 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சுமார் 323 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது நிஃப்டி.
நேற்று மார்ச் 25, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 0.45 % சரிந்து வர்த்தகமாகி இருக்கிறது.
அதே போல நேற்று மார்ச் 25, 2020 லண்டனின் எஃப் டி எஸ் இ 4.45 % ஏற்றத்தில் வர்த்தகமானது.
பிரான்சின் சி ஏ சி 4.47 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 1.79 % ஏற்றத்தில் வர்த்தகமாயின.
இந்த உலக சந்தைகளின் பாசிட்டிவ் செண்டிமெண்ட் கூட இந்திய சந்தைகளில் ஏற்றத்துக்கு காரணமாக இருக்கலாம்.
இன்று மார்ச் 26, 2020, வியாழக் கிழமை, ஆசியாவின் பெரும்பாலான சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஜப்பானின் நிக்கி, சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் போன்ற சந்தைகள் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
அதிகபட்சமாக இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 10.56 % அதிகரித்து இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 29 பங்குகள் ஏற்றத்திலும், 01 பங்கு இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பிஎஸ்இ-யில் 1,670 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
அதில் 1,186 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 328 பங்குகள் இறக்கத்திலும், 94 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
கெயில், ஹெச் சி எல் டெக், இந்தியன் ஆயில், என் டி பி சி, ஐ டி சி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.