கடந்த சில நாட்களாக தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில் திடீரென இன்று 1300 புள்ளிகளுக்கும் அதிகமாக சென்செக்ஸ் சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்று காலை வர்த்தகம் 41,048 புள்ளிகளில் தொடங்கிய நிலையில் நேரம் ஆக ஆக சென்செக்ஸ் புள்ளிகள் கடுமையாக சரிந்தது.

இன்று வர்த்தக முடிவின்போது 1320 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

சீன அமெரிக்க நாடுகளுக்கும் இடையே வணிக உறவில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாகவே இந்த சரிவு ஏற்பட்டிருக்கும் என்றும்; அது மட்டுமின்றி உலக நாடுகளில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவியுள்ளதாலும் பங்குச்சந்தை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு உள்ளதாகவும் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்; செய்திகள் வெளி வந்ததும் பங்குச்சந்தை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

நேற்றைய குளோசிங் புள்ளியான 40,794 புள்ளியில் இருந்து 1,066 புள்ளிகள் சரிந்து, 39,728 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் ஒரே ஒரே ஒரு பங்கு மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமானது. மீதமுள்ள 29 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,790 பங்குகள் வர்த்தகமாயின.

அதில் 816 பங்குகள் ஏற்றத்திலும், 1,823 பங்குகள் விலை இறக்கத்திலும், 151 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

இண்டெக்ஸ் பெயர்குளோசிங் புள்ளிகள்மாற்றம் (புள்ளி)மாற்றம் (%)
BSE IT21,716.56-596.08-2.67%
BSE FMCG10,965.92-121.04-1.09%
BSE Cap Goods13,505.44-291.06-2.11%
BSE Cons Durbl24,033.62-153.99-0.64%
BSE Healthcare19,653.37-343.45-1.72%
BSE Teck9,827.83-278.31-2.75%
BSE PSU4,388.31-73.06-1.64%
BSE Bankex26,169.76-894.65-3.31%
BSE Auto17,936.90-229.65-1.26%
BSE Metal7,912.62-62.89-0.79%
BSE Oil & Gas11,755.19-135.36-1.14%
BSE Realty1,652.92-39.45-2.33%
BSE Power1,592.09-15.17-0.94%
BSE Greenex2,829.30-55.56-1.93%
BSE Carbonex1,900.43-46.94-2.41%
BSE Basic Metal2,753.64-34.09-1.22%
BSE CD & Serv3,621.50-38.64-1.06%
BSE Finance5,296.58-155.84-2.86%
BSE Industrials2,545.78-46.70-1.80%
BSE Energy6,250.90-199.99-3.10%
BSE Telecom988.13-36.23-3.54%
BSE Utilities1,403.23-5.21-0.37%

கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் திடீரென 1320 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்திய பங்குசந்தை மட்டுமின்றி ஐரோப்பா மற்றும் ஆசிய பங்குசந்தைகள் அனைத்துமே இறக்கத்தில் தான் என்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே