கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு மட்டும் போதாது: WHO

அதிவேகமாக பரவி வரும் கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது என்று உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

உலகளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துவிட்டது.

இந் நிலையில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர். டெட்ரோஸ், சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அவர் கூறி இருப்பதாவது,

  • வேகமாக பரவி வரும் கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது.
  • ஊரடங்கின் மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்க சொல்வது சுகாதாரத்துறையின் மீதான அழுத்தத்தை குறைக்கும்.
  • அதே நேரத்தில் சுகாதார பணியாளர்கள், பரிசோதிக்கும் மையங்களை அதிகரித்து கொரோனாவை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும்.
  • தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யும் வசதியை உருவாக்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து யார், யாருக்கு நோய் பரவியிருக்க கூடும் என்பதை கண்டறிய வேண்டும்.
  • அதற்கு தெளிவான திட்டங்கள் தேவை.
  • கொரோனா ஒழிப்பில் உலக நாடுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே