சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சீனாவின் ஊஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ள இந்த வைரஸ், கணிக்க முடியாத அளவுக்கு அதிதீவிரமாக பரவி வருகிறது.
அதனால் இந்திய முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
அதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணியை வழக்கம் போல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தூய்மை பணியாளர்கள் போக்குவரத்து வசதியின்றி தவிப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
எண்ணூர் மற்றும் மணலியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.