35 நாடுகளை சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்ற கருத்தரங்கம்

35 நாடுகளை சேர்ந்த தொழில் முனைவோர் மற்றும் தொழில் வல்லுனர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுனர்களுக்கு ஆன மூன்று நாள் கருத்தரங்கம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

35 நாடுகளிலிருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் புதிய தொழில்நுட்பம் கைவினை பொருட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை எப்படி பயன்படுத்துவது அதனை மாணவர்கள் எவ்வாறு தங்களுடைய வருங்கால கல்வி மற்றும் தொழிலில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பல தகவல்களை வெளிநாட்டில் தொழில் செய்யும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் எடுத்துரைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே