மதுரை மத்திய சிறைச்சாலையில் போலீசார் விசாரணை

மதுரை மத்திய சிறைச்சாலையில் விதிகளை மீறி சட்டவிரோதமாக கஞ்சா, சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தப் படுகிறதா?? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி தலைமையில், ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் தனித்தனியே இந்த சோதனை நடத்தப்பட்டது.

தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மதுரை சிறையில், அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காலை 5.50 மணிக்குத் தொடங்கிய சோதனை காலை 8.45 மணிக்கு நிறைவு பெற்றது.

ஒரு செல்போன், 2 சிம்கார்டுகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பாக்கெட் ஒன்று கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே