நாட்டிலேயே பணக்கார எம்.எல்.ஏ வேட்பாளர்…!

நாட்டிலேயே பணக்கார வேட்பாளர் என்ற பெயர் பெற்ற கர்நாடகாவின் முன்னாள் அதிருப்தி எம்எல்ஏ எம்.டி.பி. நாகராஜின் சொத்து மதிப்பு 18 மாதங்களில் 185 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

எம்.பி.டி.நாகராஜ் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். 66 வயதான இவர் கடந்த கர்நாடகா ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.

மஜத – காங்கிரஸ் அரசுக்கு ஆதரவை விலக்கியதால் இவர் உள்பட 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டடது.

இந்த வழக்கில் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இடைத்தேர்தலில் போட்டியிடவும் அனுமதி வழங்கியது.

பாஜக சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள நாகராஜ் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் 1200 கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த சொத்து மதிப்பை விட தற்போது 185 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் – ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கான ஆதரவை அவர் வாபஸ் பெற்ற ஆகஸ்ட் மாதம் மட்டும் அவரது 53 வங்கிக் கணக்கு டெபாசிட்களில் 48 கோடி ரூபாய் வந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே